• Fri. Sep 22nd, 2023

24×7 Live News

Apdin News

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்ததாக தகவல் | Popular YouTuber TTF Vasan injured in road accident

Byadmin

Sep 18, 2023


காஞ்சிபுரம்: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காஞ்சிபுரம் அருகே பைக்கில் சென்றபோது அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்ற அவர் பைக்கை வீலிங் செய்ய முயன்றபோது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் அவரது கை எலும்பு முறிந்துள்ளது. அது தவிர உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் விபத்தில் சிக்கியதாக சொல்லி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றி உள்ளதாக தகவல்.

யூடியூபில் பிரபல டிராவல் பிளாகராக வலம் வரும் கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசனுக்கு லட்ச கணக்கான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவரது ஃபாலோயர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர். கடந்த ஆண்டு இவர் தனது பிறந்தநாளை ஒட்டி, தன்னைப் பின்தொடர்வோருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். இந்த மீட்டப்பில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் போலீஸ் எச்சரிக்கும் அளவுக்கு அது சென்றது. அவரது அழைப்பை ஏற்று வந்த ஆயிரக்கணக்கானோரில் பலரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். இவரது இந்த ‘மாஸ்’ சந்திப்பு குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்களாகவும் எழுந்தன.

அவ்வப்போது இவர் சாலையில் பயணம் செய்து சர்ச்சையில் சிக்குவார். போலீஸார் அவர் மீது வழக்கு தொடர்ந்து, எச்சரித்து அனுப்புவது வழக்கம். கடந்த ஜூன் மாதம் அவரது பிறந்தநாள் அன்று அவர் நடிக்கும் ‘மஞ்சள் வீரன்’ படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது. மணிக்கு 299 கி.மீ வேகத்தில் படப்பிடிப்பு என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



By admin