• Wed. Dec 4th, 2024

24×7 Live News

Apdin News

பிரிட்டன்: பிறந்ததிலிருந்து மூன்று ஆண்டுகளாக குழந்தையை டிராயரில் மறைத்து வைத்திருந்த தாய் – எதற்காக?

Byadmin

Nov 28, 2024


மூன்று வருடங்களாக படுக்கையின் கீழ்உள்ள டிராயரில் தனது மகளை அடைத்து வைத்த தாய்

பட மூலாதாரம், CPS

படக்குறிப்பு, பிறந்த முதல் மூன்று வருடங்களாக ஒரு தாய், அவரது மகளை டிராயரில் அடைத்து வைத்திருக்கிறார்.

பிரிட்டனில் பிறந்த முதல் மூன்று வருடங்களாக ஒரு தாய், அவரது மகளை டிராயரில் அடைத்து வைத்திருக்கிறார். இந்த குற்றத்திற்கு அந்த தாய்க்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிர அலட்சிய செயலுக்காக ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டிராயரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்தச் குழந்தை, வெளி உலகத்தையோ, சுத்தமான காற்றையோ அனுபவித்தது இல்லை என்றும் செஷயரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்திருந்த ஒருவர் அந்த குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டபோதுதான் அவர் கண்டுபிடிக்கப்பட்டார் என்றும் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, அந்தச் குழந்தையின் பெயரையோ அல்லது அவருடைய குடும்பத்தை பற்றியோ குறிப்பிடவில்லை.

இதுவரை நடந்த விசாரணையில், குழந்தையை கொடுமைப்படுத்தியது தொடர்பான நான்கு குற்றச்சாட்டுக்களை அவரது தாய் ஒப்புக்கொண்டார். அதற்காக செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

By admin