• Wed. Sep 28th, 2022

24×7 Live News

Apdin News

புரட்டாசி மாதத்தில் செய்ய கூடிய நிகழ்வுகள் – Vanakkam London

Byadmin

Sep 22, 2022


அதாவது வளைகாப்பு, நிலை வாசல் வைத்தல், காது குத்துதல் போன்ற சிறு சிறு சுப காரிங்களை இந்த புரட்டாசி மாதத்தில் செய்து கொள்ளலாம்.

ஏனெனில் இவை அந்தந்த மாதங்களில் கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருக்கும். அதாவது ஒன்பதாவது மாதம் செய்ய வேண்டிய வளைகாப்பை பத்தாம் மாதம் செய்ய முடியாது.

இந்த மாத கணக்கை கொண்டு செய்யப்படும் சுப காரியங்களை செய்து கொள்ளலாம். அது மட்டும் இல்லாமல் இதனால் பெருமளவு நமது பூஜைகள், பித்ரு கடமைகள் பாதிக்காது.

இந்த காலத்தில் பூமி பூஜை போடுவது, புது வீடு கிரகப்பிரவேசம் செய்வது, திருமணம் போன்ற பெரிய சுப நிகழ்ச்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நமக்கும் நம் சந்ததியினருக்கும் நன்மை தரும்.

இந்த புரட்டாசி மாதம் முழுவதும் சைவ உணவுகளை மட்டும் சாப்பிட்டு இறை வழிபாடு செய்ய வேண்டும் என நாம் முன்னோர்கள் சொன்ன காரணம் இந்த மாதம் முதல் நமக்கு பருவ நிலை மாற்றங்கள் தொடங்கும்.

இந்த சமயத்தில் நாம் அசைவ உணவை அதிக அளவில் எடுத்து கொண்டால் அது நம் உடல் நலத்திற்கு தீங்கை தான் ஏற்படுத்தும். நோய்கள் வராமல் தடுக்கவும் தான் இவைகளை நம் முன்னோர்கள் கடைபிடிக்க   சொல்லி இருக்கிறார்கள்.