• Mon. Sep 9th, 2024

24×7 Live News

Apdin News

புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது; 12 பேர் பலி

Byadmin

Sep 3, 2024


புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்ததில் குறைந்தது 12 பேர் பலியாகியுள்ளனர் என பிரான்ஸ் கடலோர பொலிஸார் தெரிவித்தனர்.

Gris-Nez இடைவெளியில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாகவும் பிரான்ஸ் கடலோர பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், பலருக்கு மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

சம்பவத்தில் இருவர் காணாமல் போயுள்ளனர் என்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார்.

இவ்வாண்டு ஆங்கிலக் கால்வாயின் குறுக்கே பயணம் செய்ய முயன்று உயிரிழந்தவர்களில் இந்தப் பேரழிவுதான் அதிகம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் ஹெலிகாப்டர்கள், கடற்படை படகுகள் மற்றும் மீன்பிடிக் கப்பல்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக பிரான்ஸ் கடலோர பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பிரான்ஸ்பிரான்ஸ்

By admin