• Sat. Nov 2nd, 2024

24×7 Live News

Apdin News

மகாராஷ்டிரா: பாபநாசம் பட பாணியில் குற்றத்தை மறைக்க முயற்சி – துப்பு துலங்கியது எப்படி?

Byadmin

Oct 27, 2024


மகாராஷ்டிரா, பாபநாசம் பட பாணியில் கொலை
படக்குறிப்பு, கொலை செய்யப்பட்ட 32 வயதான ஜோத்ஸ்னா ஆகஸ்ட் 28-ஆம் தேதி காணாமல் போனார்

  • எழுதியவர், பாக்யஶ்ரீ ராவத்
  • பதவி, பிபிசி மராத்திக்காக

பாபநாசம் பட பாணியில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கொலை செய்துவிட்டு அதனை மறைக்க ஒருவர் முயற்சி செய்துள்ளார். நாக்பூரில் காதலித்த பெண்ணை கொன்று புதைத்து, அந்த இடத்தை சிமெண்ட் வைத்து அந்த நபர் அடைத்துள்ளார் என்று காவல்துறை கூறியுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர் ஆவார்.

நாக்பூரில் உள்ள பெல்டரோடி காவல்துறையினர் குற்றம்சுமத்தப்பட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

நடந்தது என்ன?

கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஜோத்ஸ்னா பிரகாஷ் அக்ரே (32), குற்றம்சாட்டப்பட்டுள்ளவரின் பெயர் அஜய் வான்கடே (34). ஆகஸ்ட் 28-ஆம் தேதி அன்று ஜோத்ஸ்னா காணாமல் போனார். அவர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக 55 நாட்களுக்குப் பிறகு காவல்துறை கூறியுள்ளது.

புட்டிபோரி பகுதியில் ரயில்வே தண்டவாளத்தின் அருகே அமைந்துள்ள புதர் மண்டிய பகுதியில் குற்றம் சுமத்தப்பட்ட நபர் அந்த பெண்ணின் உடலை புதைத்திருக்கிறார் என்று காவல்துறை கூறியுள்ளது. பெரிய குழி ஒன்றைத் தோண்டி அதில் அந்த பெண்ணின் உடல் போடப்பட்டுள்ளாது. அதன் மேல் ப்ளாஸ்டிக் விரிக்கப்பட்டு அதில் கற்கள் கொட்டப்பட்டிருக்கிறது. இறுதியில் சிமெண்ட் கலவை கொண்டு அந்த குழி மூடப்பட்டுள்ளது.

By admin