• Tue. Jul 16th, 2024

24×7 Live News

Apdin News

மணிப்பூர் கலவரம்: ஓராண்டுக்குப் பிறகும் ஆறாத வன்முறையின் காயங்கள் – கள நிலவரம் என்ன?

Byadmin

Jul 11, 2024


மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA/BBC

படக்குறிப்பு, 52 வயதான நெங்னெய் சாங், மணிப்பூரைச் சேர்ந்தவர். இப்போது மிசோரமில் உள்ள நிவாரண முகாம்களில் வசிக்கிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த அசம்பாவிதம் ஏற்பட்டு ஒரு வருடம் ஆன நிலையிலும் மணிப்பூர் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “மணிப்பூர் அமைதிக்காக ஒரு வருடமாகக் காத்துக் கொண்டிருக்கிறது. அம்மாநிலம் 10 ஆண்டுகளாக அமைதியாகவே இருந்தது. திடீரென ஏற்பட்டதோ இல்லை உருவாக்கப்பட்டதோ, ஆனால் அந்தக் கலவரத்தின் தீ இன்னும் எரிந்து கொண்டு தான் இருக்கிறது,” என்றார்.

இந்த அறிக்கைக்குப் பிறகு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவத் தளபதி, உளவுத்துறை தலைவர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடனான சந்திப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான குக்கி மற்றும் மெய்தேய் இன மக்கள் இன்னும் முகாம்களில் தான் வசித்து வருகின்றனர். ஒரு சிலர், கலவரத்தில் இருந்து தப்பித்து அண்டை மாநிலமான மிசோரமில் தஞ்சமடைந்துள்ளனர்.

By admin