• Sun. Oct 6th, 2024

24×7 Live News

Apdin News

மழையால் மண்சரிவு: குன்னூரில் மண்ணில் புதைந்து ஆசிரியை உயிரிழப்பு | Heavy rains cause landslide in Coonoor: 1 dead

Byadmin

Sep 30, 2024


குன்னூர்: குன்னூரில் பெய்த கன மழையால் மண்சரிந்து வீட்டில் 4 பேர் சிக்கி கொண்டனர். அதில் மண்ணில் புதைந்த ஆசிரியை சடலமாக மீட்கப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு குன்னூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள சேட் காம்பவுண்ட் பகுதியில் பெய்த கன மழையில் திடீரென்று அங்கு நடைபாதையில் மண்சரிவு ஏற்பட்டது.

இதன் சப்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த பள்ளி ஆசிரியை ஜெயலட்சுமி என்பவர் மண்சரிவில் சிக்கி கொண்டார். மேலும் வீட்டில் இருந்த அவரது கணவர் ரவி, மகள்கள் வர்ஷா, ஆயூ ஆகியோர் வீட்டிற்குள் சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு துறையிருக்கு தகவல் அளிக்கபட்டதில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து வீட்டில் சிக்கி கொண்ட மூவரையும் பத்திரமாக மீட்டனர்.

இருந்த போதிலும் மண்ணில சிக்கிய ஜெயலட்சுமியை 3 மணி நேரம் போராடி சடலமாக மீட்டனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர், வருவாய்துறையினர், நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



By admin