மேட்டூர்:
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.
நேற்று வினாடிக்கு 847 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 819 கன அடியாக சரிந்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 106.02 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 105.54 அடியாக சரிந்தது.