• Fri. Sep 22nd, 2023

24×7 Live News

Apdin News

யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் ஒய்சாலா கோவில்கள் சேர்ப்பு – பிரதமர் மோடி வாழ்த்து

Byadmin

Sep 20, 2023


புதுடெல்லி:

உலக பாரம்பரிய பட்டியலில் இந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவின் பேலூர், ஹாலேபித் மற்றும் சோமநாத்புரம் ஆகியவற்றின் ஒய்சாலா கோவில்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதனால் இந்தியாவின் 42-வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலம் என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக, யுனெஸ்கோ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன, வாழ்த்துகள் என தெரிவித்துள்ளது.

இதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், இந்தியாவுக்கு அதிக பெருமை கிடைத்துள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் பிரமிக்க செய்யும் புனித தோற்றம் கொண்ட ஒய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

காலவரையற்ற அழகு மற்றும் சிக்கலான விவரங்களைக் கொண்ட ஒய்சாலா கோவில்கள் இந்தியாவின் கலாசார பாரம்பரிய செறிவுக்கான தக்க சான்றாக உள்ளது. நம்முடைய முன்னோர்களின் தனிச்சிறப்புடனான கைவினை திறனை விளக்கும் வகையிலும் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் மேற்கு வங்காளத்தின் சாந்திநிகேதன் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

By admin