• Fri. Sep 22nd, 2023

24×7 Live News

Apdin News

ரஷ்யாவின் அடுத்த இலக்கு யார்? அச்சத்தில் அண்டை நாடுகள் என்ன செய்கின்றன தெரியுமா?

Byadmin

Sep 18, 2023


ரஷ்யா யுக்ரேன் போர்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், கத்யா அட்லர்
  • பதவி, ஐரோப்பிய ஆசிரியர், பிபிசி

ரஷ்யா – யுக்ரேன் போரில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள், யுக்ரேனுக்கு ஆயுத உதவிகள் செய்து வருகின்றன என்பதை உலகறியும்.

நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், எஃப்16 ரக போர் விமானங்கள் உள்ளிட்டவை இந்த ஆயுத உதவியில் அடங்கும். ஆனால், யுக்ரேனிய ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மற்றொரு உதவியான “சௌனாஸ்” பற்றி உலகம் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை.

ஆனால், எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும், போரில் உதவி பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் யுக்ரேனுக்கு அவ்வபோது பயணம் மேற்கொண்டு வருபவருமான இல்மர் ராக், சௌனாஸ் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்.

கிரவுட் ஃபண்டிங் எனப்படும் கூட்டு நிதி திட்டத்தின் கீழ் நிதி திரட்டி அதன் மூலம் யுக்ரேன் ராணுவ வீரர்களுக்கு உதவும் நோக்கில் நூற்றுக்கணக்கான சௌனாஸ் அலகுகளை உருவாக்கி வருகிறார் ராக்.

By admin