ராணுவ வீரர் திருமூர்த்தி உடல் நல்லடக்கம்: அமைச்சர், ஆட்சியர் அஞ்சலி !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜம்மு – காஷ்மீரில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் திருமூர்த்தியில் உடல் அவர் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அமைச்சர் காமராஜ், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், எஸ்பி துரை ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

திருவாரூர் மாவட்டம் புள்ளவராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் ஹிரா நகரில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். பணியில் இருக்கும் பொழுது தவறுதலாக துப்பாக்கி வெடித்து காயமடைந்ததில் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றைய முன்தினம் உயிரிழந்தார்.

image

Advertisement

இந்நிலையில் அவரது உடல் அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் புள்ளவராயன் குடிக்காடு கிராமத்திற்கு வந்தடைந்தது. அவரின் உடலுக்கு அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் ஆனந்த்,மாவட்ட எஸ்பி துரை உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த திருமூர்த்தியின் உடலிற்கு காவல்துறையினர் துப்பாக்கியை தரையை நோக்கி கீழே இறக்கி அஞ்சலி செலுத்தினர்.