• Sat. Jan 28th, 2023

24×7 Live News

Apdin News

ரிஷி சுனக் சீட் பெல்ட் அணியாததால் அபராதம் – பிரதமருக்கு அபராதம் விதித்த பிரிட்டன் காவல்துறை

Byadmin

Jan 21, 2023


பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சீட் பெல்ட் அணியாததால் அபராதம் விதித்த காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகத்திற்காக காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போதே வீடியோவை பதிவு செய்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அந்த நேரத்தில் கார் பயணத்தின்போது சீட் பெல்ட் அணியாமல் இருந்ததற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

42 வயதான அவருக்கு நிலையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக லன்காஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது.

“இதுவொரு தவறு என்பதை முழுமையாக ரிஷி சுனக் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்றும் பிரதமர் இல்லம் தெரிவித்துள்ளது. மேலும் அபராதத்தையும் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

சீட் பெல்ட் இருக்கும்போது, அதை அணியத் தவறுவோருக்கு 100 யூரோ அபராதம் விதிக்கப்படும்.