• Sat. Nov 2nd, 2024

24×7 Live News

Apdin News

வடக்கு இலண்டனில் கார் மோதி உயிரிழந்த குழந்தை

Byadmin

Oct 30, 2024


வெம்ப்லியில் இரண்டு வயது குழந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் வெம்ப்லியின் ரவுலி குளோஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

“ஒரு கார் இரண்டு வயது சிறுவன் மீது மோதியது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் மருத்துவ ஊழியர்களின் சிறந்த முயற்சியின் போதிலும் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பில் கார் சாரதியிடம் பேசப்பட்டது. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை” என மெட் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

“சிறுவனின் அம்மா சாரதியிடம் காரை நிறுத்தச் சொன்னார் – ஆனால் அவர் நிறுத்தாமல் மேலும் சென்றார்.” என ஒரு சாட்சி The Sun இடம் கூறியுள்ளார்.

“அக்டோபர் 27, ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணியளவில் வெம்ப்லியின் ரவுலி குளோஸில் நடந்த இந்த மோதல் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என, மெட் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

துணை மருத்துவர்கள் மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது, ஆனால் சிறுவனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என, இலண்டன் அம்பியுலன்ஸ் சேவையின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

By admin