• Sun. Oct 6th, 2024

24×7 Live News

Apdin News

வயிற்று வலி காரணமாக அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி | Minister Anbil Mahesh admitted to hospital

Byadmin

Oct 2, 2024


சென்னை: வயிற்று வலி காரணமாக அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தான் பதவியேற்றது முதல் துறைக்கு கீழ் வரும் பள்ளிகள் மற்றும் நூலகங்களில் திடீர் ஆய்வு செய்து வருகிறார். அந்தவகையில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீர் ஆய்வை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக மாநிலத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் நேரடியாக சென்று அங்குள்ள பள்ளிகள், நூலகங்களில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, 206-வது தொகுதியாக காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று ஆய்வை முடித்து கொண்டு சென்னைக்கு திரும்பிவிட்டார். இந்நிலையில் அமைச்சர் அவருக்கு இன்று (அக்.01) மாலை திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் வழங்கிய சிகிச்சையில் அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. முன்னதாக சிகிச்சையில் உள்ள அவரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு நலம் விசாரித்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



By admin