• Fri. Sep 22nd, 2023

24×7 Live News

Apdin News

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அலைபேசி வெளிச்சத்தில் சிகிச்சை

Byadmin

Sep 19, 2023


நாகப்பட்டினம் நாகூரைச் சேர்ந்தவர் இருவர் மோட்டார்சைக்கிளில் சென்றனர். இவர்கள் மோட்டார் சைக்கிள் நாகை அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சென்ற போது, எதிரே 3 பேர் வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் 5 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், அவர்களில் இருவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், படுகாயமடைந்த 3 இளைஞர்கள் நாகை அரசு மருத்துவ கல்லூரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படுகாயம் அடைந்த 3 பேருக்கும் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தபோது மின்சாரம் திடீரென தடைப்பட்டது. இதனால் டாக்டர்கள் அலைபேசி டார்ச் வெளிச்சத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

இதையறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இரவு நேரத்தில் அவசர சிகிச்சை பிரிவில் மின்சாரம் இல்லாமல் எப்படி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள் என்றும் பொது மக்களிடையே கேள்வி எழுந்தது.

எனவே தமிழக அரசு நாகை மட்டுமன்றி இன்வெட்டர் இல்லாத அனைத்து அரசு வைத்தியசாலைகளுக்கும் இன்வெட்டர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin