விபத்துக்குள்ளாகிய இளைஞன் -அதிர்ச்சியில் காவல்துறை.

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞன் பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானார்.

வேலூர் மாவட்டம் ஆற்காடை சேர்ந்த ராஜா என்ற இளைஞனே குறித்த விபத்துக்குள்ளாகினார். அதிஷ்ட வசமாக உயிர் தப்பிய இவர் அங்கு காண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் கால்களில் விழுந்து நான் வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறிகெஞ்சி மன்றாடியுள்ளார்.

இருப்பினும் தலைமை காவலர் ராமதாஸ் பிடிவாதம் செய்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து இளைஞரை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் பொலிஸார் கூறுகையில் மதுபோதையில் இருந்த தன் மீது வழக்கு போட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில், தன்னை விட்டுவிடுங்கள் என்று கூறியதாக தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் குறித்த இளைஞனின் இந்த செயல் எமக்கு அதிர்ச்சியை அதிர்ச்சியை அளித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.