• Thu. Feb 6th, 2025

24×7 Live News

Apdin News

விராட் கோலி: ரஞ்சி கோப்பை போட்டியில் க்ளீன் போல்ட் – சாம்பியன்ஸ் கோப்பையில் தொடர வேண்டுமா?

Byadmin

Feb 1, 2025


விராட் கோலி: ரஞ்சி கோப்பையில் க்ளீன் போல்ட் – சாம்பியன்ஸ் கோப்பையில் தொடர வேண்டுமா?

பட மூலாதாரம், Getty Images

விராட் கோலி, 12 ஆண்டுகளுக்குப்பின் ரஞ்சி கோப்பை எலைட் பிரிவில் கடைசி லீக்கில் சர்வீசஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணிக்காக களமிறங்கினார்.

முதல் இன்னிங்ஸில் 15 பந்துகளில் ஒரு பவுண்டரி உள்பட 6 ரன்கள் சேர்த்த கோலி, வேகப்பந்துவீச்சாளர் ஹிமான்சு சங்வான் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி ஆஃப் ஸ்டெம்ப் தெறிக்க ஆட்டமிழந்து வெளியேறினார்.

உள்நாட்டுப் போட்டிகளில் பயிற்சி

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர், நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் சீனியர் வீரர்கள் மோசமாக பேட் செய்ததைத் தொடர்ந்து, இழந்த ஃபார்மை மீட்க உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவிட்டது.

இந்திய அணியில் ஏ-பிளஸ் பிரிவு ஒப்பந்தத்தில் இருக்கும் நட்சத்திர வீரர்கள் நீண்டகாலமாக உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்காமல் சர்வதேச போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தனர்.



By admin