• Thu. May 23rd, 2024

24×7 Live News

Apdin News

விளையாட்டு மைதானமாக மாறிய வீராணம் ஏரி: முற்றிலும் வறண்டுவிட்டது ஏன்? தீர்வு என்ன?

Byadmin

May 16, 2024


வீராணம் ஏரி
படக்குறிப்பு, தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடைக்கும் வீராணம் ஏரி.

சோழ இளவரசர் ராஜாதித்தனால் 1100 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான வீராணம் ஏரி மழைக்காலத்தில் கடல் போல காட்சியளிக்கும்.

கோடைக்காலத்தில் அவ்வளவு வனப்பாக இல்லையென்றாலும், ஓரளவுக்கு நீர் இருப்பு காணப்படும். ஆனால், இந்த ஆண்டு அந்தப் பிரமாண்ட ஏரி முற்றிலும் வறண்டு காட்சியளிக்கிறது.

இந்த ஏரி தமிழ்நாடின் கலாசாரத்திலும் முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காகப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த வீராணம் ஏரி, தற்போது வறண்டு காணப்படுவது ஏன்?

‘வீர நாராயணப் பேரேரி’

இந்த ஏரியின் வரலாற்றையும் அது தற்போது வறண்டு காணப்படுவதற்கான காரணத்தையும் அறிந்துகொள்ள, கடந்த வாரம் ஒரு காலைப் பொழுதில், கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் இருந்து வீராணம் ஏரிக்கரையைச் சென்றடைந்தோம்.

By admin