டி.ஜி.பி., சைலேந்திரபாபு: நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ள ரவுடிகளை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இவர்களில் சிலர், வெளி மாநிலங்களில் பதுங்கி உள்ளனர்; இவர்களை, அம்மாநில போலீசார் உதவியுடன் விரைவில் கைது செய்ய வேண்டும்.
டவுட் தனபாலு: அவங்களை பிடிச்சிட்டு வந்து, ‘உள்ள’ தள்ளினாலும், சில நாட்கள்ல, ‘ஜாமின்’ல வந்து மறுபடியும், ‘ஏழரை’யை இழுப்பாங்க… முதல்ல இங்க இம்சை குடுத்துட்டு இருக்கிற ரவுடிகளை புடிச்சு, ‘லாடம்’ கட்டிட்டு, அப்புறமா வெளிமாநிலங்கள் பக்கம் போனா என்ன என்பது தான் எங்க, ‘டவுட்!’
திருவனந்தபுரம் காங்., – எம்.பி., சசி தரூர்: கோஷ்டி பூசலும், உட்கட்சி அரசியலும், எல்லா அரசியல் கட்சிகளிலும் நிலவும் பிரச்னை தான். காங்கிரசில் மட்டுமே, இந்தப் பிரச்னை இருப்பதாக கூற முடியாது. அரசியல் ரீதியான பெரிய பிரச்னைகளை ஒப்பிடும் போது, இது சாதாரண விஷயம்.
டவுட் தனபாலு: ‘மூக்கு என்றால் சளியும், கட்சி என்றால், கோஷ்டியும் இருக்கும்’ என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை… ஆனா, கோஷ்டிப் பூசல் காரணமாகவே, ஒரு கட்சி அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது என்றால், அது காங்கிரஸ் தான் என்பதிலும், ‘டவுட்’டே இல்லை!
![]() |
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: தி.மு.க., அரசு மீது, வாக்காளர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதை, மக்களுக்கு எடுத்துச் சொல்லி, தி.மு.க.,வுக்கு எதிராக, மிகப் பெரிய வெற்றியை அ.தி.மு.க., பெறும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பன்னீர்செல்வம் வேட்பாளரை நிறுத்தினால், அவரை சுயேச்சை வேட்பாளராகவே கருத முடியும்; அந்த வேட்பாளரும், ‘நோட்டா’வை விட குறைவான ஓட்டுகளையே பெறுவார்.
டவுட் தனபாலு: உங்க தலைவி ஜெயலலிதா உயிருடன் இருந்தப்பவே, பென்னாகரம் இடைத்தேர்தல்ல ‘டிபாசிட்’டை பறிகொடுத்த கட்சி தான், அ.தி.மு.க., என்பதை மறந்துடாதீங்க… அடுத்தவரை கிண்டல் செய்யும் முன், உங்க கட்சியின் பலத்தையும் எடை போட்டுக் கொண்டால் என்ன என்பது தான் எங்க, ‘டவுட்!’
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்