0
இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கடைசி உலகப் போர்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கடைசி உலக போர்’ எனும் திரைப்படத்தின் ஹிப் ஹாப் தமிழா ஆதி, அனகா, நாசர், நட்டி என்கிற நட்ராஜ், முனிஸ் காந்த், சிங்கம் புலி, ஹரிஷ் உத்தமன், இளங்கோ குமரவேல், அழகம் பெருமாள், ‘தலைவாசல்’ விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை ஹிப் ஹாப் தமிழா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்தி தயாராகி இருக்கும் ‘கடைசி உலக போர்’ எனும் இத்திரைப்படத்தின் பிரத்யேக காணொளி ,பாடல்கள் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் இருபதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களும், நடிப்பில் வெளியான திரைப்படங்களும் வணிக ரீதியாக பாரிய வெற்றியை பெறாததால் அவரின் இயக்கத்திலும், நடிப்பிலும் தயாராகி இருக்கும் ‘கடைசி உலக போர்’ எனும் திரைப்படத்திற்கு திரையுலக வணிகர்களிடையே போதிய ஆதரவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.