• Sun. May 24th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவின் புதிய கிரீன் கார்டு கொள்கையால் இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு?

Byadmin

May 24, 2026


அமெரிக்கா, கிரீன் கார்டு கொள்கை, டிரம்ப்

பட மூலாதாரம், Dilara Irem Sancar/Anadolu via Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்காவில் புதிய கிரீன் கார்டு கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிரீன் கார்டு பெற விரும்பும் குடியேறிகள் அமெரிக்காவில் இருந்து வெளியேறி தங்களது சொந்த நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

“அசாதாரணமான சூழ்நிலைகளைத் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் தங்களுடைய குடிவரவு நிலையை மாற்ற நினைப்பவர்கள், நாட்டிற்கு வெளியே உள்ள தூதரக வழிமுறைகள் மூலமாகவே செய்ய வேண்டும்,” என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (யூஎஸ்சிஐஎஸ்) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகளில் ஓர் அங்கமாக உள்ள இந்த நகர்வு, விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அமெரிக்காவுக்கு வருகை தருபவர்கள் நாட்டில் இருக்கும்போதே கிரீன் கார்டு பெறுவதற்காக விண்ணப்பிக்க இருந்த வழியை மூடுகிறது.

தற்போதைய நடைமுறை இந்த விண்ணப்பக் காலத்தில் குடும்பங்கள் ஒன்றாக இருக்க அனுமதித்தது என இந்தக் கொள்கையை விமர்சிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

கிரீன் கார்டு அமெரிக்காவில் நிரந்தரமாக தங்குவதை அனுமதிக்கிறது.

By admin