• Sun. May 24th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா: வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் யார்? புதிய தகவல்கள்

Byadmin

May 24, 2026


அமெரிக்கா, வெள்ளை மாளிகை, துப்பாக்கிச் சூடு

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்காவில் தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. அங்கு பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் சந்தேக நபர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரகசிய சேவை அதிகாரிகள் உடனடியாக எதிர்வினையாற்றியதாக எஃப்.பி.ஐ இயக்குநர் காஷ் படேல் கூறியுள்ளார். சம்பவ இடத்தில் எஃப்.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.

அமெரிக்கா, வெள்ளை மாளிகை, துப்பாக்கிச் சூடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சம்பவ இடத்தில் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளை மாளிகைக்கு அருகே அமைந்த தெருக்களில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக முதல்கட்டமாக ரகசிய சேவை அதிகாரிகள் கூறியிருந்தனர்.

ரகசிய சேவை செய்தி தொடர்பாளர் அந்தோணி குக்லியால்மி இது தொடர்பாக பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் பேசுகையில், “17வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ என்.டபிள்யூ அருகே துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் களத்தில் உள்ள அதிகாரிகளுடன் உறுதி செய்து வருவதாகவும்” தெரிவித்திருந்தார்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் யார்?

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் 21 வயதான நசைர் பெஸ்ட் எனத் தெரியவந்துள்ளது. இவர் ரகசிய சேவை பிரிவுக்கு முன்னரே அறியப்பட்டவர் என்று பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டாளியான சிபிஎஸ் தெரிவிக்கிறது.

By admin