• Thu. Dec 19th, 2024

24×7 Live News

Apdin News

அம்பேத்கர் அவமதிப்பு பேச்சு: அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக இன்று ஆர்ப்பாட்டம் | DMK to hold statewide protest condemning Amit Shah over his remarks on Ambedkar

Byadmin

Dec 19, 2024


சென்னை: அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திமுக சார்பில் இன்று (19-12-2024) காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முழுக்கவும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சி தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை, புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் இன்று (19-12-2024) காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முழுக்கவும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மாநிலங்​களவை​யில் கடந்த செவ்​வாய்க்​கிழமை விவாதம் நடைபெற்​றது. விவாதத்​தின் முடி​வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்​போது, ‘அம்​பேத்​கர்.. அம்பேத்​கர்.. அம்பேத்​கர்’ என முழக்​கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்​டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்​திருந்​தால், சொர்க்​கத்​தில் அவர்​களுக்கு இடம் கிடைத்​திருக்​கும். அம்பேத்​கரின் பெயரை காங்​கிரஸ் எடுத்​துக்​கொள்​வ​தில் பாஜக மகிழ்ச்​சி​யடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்​வுகள் குறித்​தும் காங்​கிரஸ் பேச வேண்​டும்” எனப் பேசியிருந்தார்.

அம்பேத்கர் குறித்த மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்​சுக்கு எதிர்க்​கட்​சிகள் கடும் கண்டனத்​தை தெரி​வித்து வருகின்றன. மேலும், அம்பேத்கரை மத்திய அமைச்சர் அமித் ஷா அவமதித்து​விட்​டதாக கூறி, நாடாளு​மன்ற வளாகத்​தில் நேற்று காங்​கிரஸ் தலைவர் மல்லி​கார்ஜுன கார்கே, எதிர்க்​கட்​சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பல்வேறு கட்சிகளின் உறுப்​பினர்கள் அம்பேத்​கரின் புகைப்​படத்தை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

மேலும், மக்களவையில், “ஜெய் பீம், ஜெய் பீம்” என்று எதிர்க்​கட்சி எம்.பி.க்கள் அவையில் முழக்​கமிட்​டனர். மாநிலங்​களவை​யிலும் எதிர்க்​கட்சி எம்.பி.க்கள் அமளி​யில் ஈடுபட்​டனர். அப்போது அவையில், மாநிலங்களவை எதிர்க்​கட்​சித் தலைவரும், காங்​கிரஸ் தேசியத் தலைவருமான மல்லி​கார்ஜுன கார்கே, அம்பேத்​கரின் புகைப்படத்தை எடுத்து உயர்த்திக் காட்​டி​னார்.

“அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தை பற்றி கவலைப்பட வேண்டும். நாட்டை பற்றியும், மக்களை பற்றியும், அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள். சொல்ல வேண்டும்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திமுக சார்பில் இன்று (19-12-2024) காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முழுக்கவும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.



By admin