• Mon. May 25th, 2026

24×7 Live News

Apdin News

அறிமுக நடிகர் டி. அண்டனி நடிக்கும் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

Byadmin

May 25, 2026


தமிழ் சினிமாவில் நடிகர்கள் அறிமுகமாவது அதிலும் கதாநாயகர்களாக அறிமுகமாவது தொடர்ச்சியான ஒன்று என்றாலும்.. சிலரின் அறிமுகம் பெரும் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில் அறிமுக நடிகர் டி .அண்டனி கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘இயல் இசையே’ எனும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.‌

அறிமுக இயக்குநர் டி. அண்டனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படத்தில் டி. அண்டனி, மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி, மாதங்கி சதீஷ், ரியா மனோஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பியெட்ரோ வில்லனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெய்கர் ஹரி நாத் – அசோக் ஸ்ரீதரன்- ஜாய் ரேடா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ரொமான்டிக் ஜேனரிலான இந்தத் திரைப்படத்தை அந்தோணி’ஸ் அட்லியே நிறுவனம் சார்பில் டி. அண்டனி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ஏனோ ஏன் என்னை எதுவோ செய்தாய் நானாய் நானாகிறேன்..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் கார்த்திக் நேதா எழுத, பின்னணி பாடகர் ஆர்கே ஆதித்யா பாடியிருக்கிறார். காதலர்கள் விரும்பும் மெல்லிசையாக உருவாகி இருக்கும் இந்த பாடல் ..ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடல் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

By admin