2
அஸ்வெசும நலன்புரிப் பலன்களைப் பெறத் தகுதியுடைய நபர்களின் பட்டியலை வருடாந்தம் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
2002 ஆம் ஆண்டு இலக்கம் 24 இன் நலன்புரிப் பலன்கள் சட்டத்தின் பிரிவு 23 இற்கமைய, நலன்புரிப் பலன்களுக்குத் தகுதியுடைய மற்றும் தகுதியற்ற குடும்பங்கள் மற்றும் நபர்களின் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட அஸ்வெசுமவின் முதல் கட்டத்தின் கீழ் தற்போது பலன்களைப் பெறுவோர் மற்றும் பலன்களைப் பெறாத அனைத்துக் குடும்பங்கள் மற்றும் நபர்களும் சட்டத்தின் பிரகாரம் தமது தகவல்களைப் புதுப்பிப்பதற்காக நலன்புரிப் நன்மைகள் சபையினால் நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக இக்கால அவகாசத்தை 2025.12.31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நலன்புரிப் நன்மைகள் சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.