இங்கிலாந்தில் நீண்டகாலமாக நீடித்து வரும் சம்பளப் பிரச்சினை தொடர்பாக, “பிரிட்டிஷ் மருத்துவ சங்கம்” (BMA) கிறிஸ்துமஸுக்கு முன்னர் ஒரு புதிய சுற்று வேலைநிறுத்தங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, இம்மாதம் 17 முதல் ஐந்து நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மருத்துவர்கள் சங்கத்தால் நடத்தப்படும் 14ஆவது வேலைநிறுத்தம் இதுவாகும்.
இது மருத்துவமனைகளில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்திடமிருந்து தங்களுக்கு நம்பகமான சலுகை எதுவும் கிடைக்கவில்லை என்பதால், வேலைநிறுத்தத்தைத் தவிர வேறு வழியில்லை என்று சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஊதிய உயர்வுகளைப் பெற்றபோதிலும், பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டால், ரெசிடென்ட் மருத்துவர்களின் ஊதியம் 2008ஐ விட இன்னும் ஐந்தில் ஒரு பங்கு குறைவாகவே உள்ளது என்று சங்கம் வாதிடுகிறது.
“சில ஆண்டுகளில் படிப்படியாக ஊதியத்தை உயர்த்துவதும், எங்கள் மருத்துவர்களின் வேலை பாதுகாப்பிற்கு பொதுவான senseஇல் சில தீர்வுகளை வழங்குவதும் அரசாங்கத்தின் இலக்கை அடையக்கூடியதுதான்” என்றும் “இந்த வேலைநிறுத்தங்கள் நடக்க வேண்டிய அவசியமில்லை,” என்றும் BMA ரெசிடென்ட் மருத்துவர்கள் குழுவின் தலைவர் டொக்டர் ஜாக் ஃப்ளெட்சர் கூறினார்.
இதேவேளை, பிரிட்டிஷ் மருத்துவ சங்கதின் இந்த நடவடிக்கையை எரிச்சலூட்டும் செயல் என்று NHS Providersஇன் தலைமைச் செயல் அதிகாரியான டேனியல் எல்கெலஸ் விமர்சித்துள்ளார்.
கிறிஸ்துமஸுக்கு முந்தைய காலத்தில், அனைத்து கைகளும் தேவை என்றும், முடிந்தவரை அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை வெளியேற்றி அவர்களை அன்பானவர்களுடன் வீட்டிற்கு அனுப்ப வேண்டியது மிக முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இது நோயாளிகளுக்கும் NHSஇல் பணிபுரியும் ஏனைய ஊழியர்களுக்கும் முற்றிலும் அநியாயமானது என்றும், முட்டுக்கட்டையை உடைக்க இரு தரப்பினரும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
The post இங்கிலாந்தில் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள மருத்துவர்கள்; 5 நாட்கள் தொடரலாம்! appeared first on Vanakkam London.