• Fri. Sep 27th, 2024

24×7 Live News

Apdin News

இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆக பிரான்ஸ் அதிபர் ஆதரவு

Byadmin

Sep 27, 2024


இமானுவேல் மக்ரோங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் ஐநா பேரவையில் உரையாற்றுகையில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தார்

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினர் ஆக்கவேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வியாழனன்று (செப்டம்பர் 26) நடைபெற்ற ஐ.நா. பேரவையின் 79-வது கூட்டத்தில் மக்ரோங் உரையாற்றினார். பாதுகாப்பு சபையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அப்போது அவர் கோரிக்கை விடுத்தார். ​​பாதுகாப்பு சபையில் இந்தியா, பிரேசில், ஜப்பான் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக ஆக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக ஒருவர் மற்றவரை (முன்மொழிவுகளை) நிறுத்தும் வரை முன்னேறுவது கடினம் என்று மக்ரோங் கூறினார்.

“இங்கே எல்லாம் சரியாக இருக்கிறதா? நான் அப்படி நினைக்கவில்லை. எனவே ஐக்கிய நாடுகள் சபையை பயனுள்ளதாக்க வேண்டும். ஆனால் இதற்கு அதிக உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். எனவே பாதுகாப்பு சபையின் விரிவாக்கத்தை பிரான்ஸ் ஆதரிக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

By admin