• Tue. Jun 9th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா கூட்டணியில் த.வெ.க? – அமைச்சர் செங்கோட்டையன் பதில்

Byadmin

Jun 9, 2026


சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை செய்தார். இதன்பின் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* ரேசன் கார்டுகள், முதியோர் உதவி உள்ளிட்ட திட்டங்களின் பலன்கள் மக்களுக்கு எளிதாக கிடைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். மேலும் துறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

* பத்திர பதிவில் உள்ள தேக்கங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* பத்திர பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக பட்டாக்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

* தென்மேற்கு பருவமழை நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் கூடுதலாக பெய்து உள்ளது.

* தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பேரிடர்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவை எதிர்கொள்ள ஹெலிகாப்டர் தயார் நிலையில் இருக்கிறது.

* மேட்டூர் அணைக்கு குறைவாகவே நீர் வருகிறது.

* மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெரிதாக இல்லை.

* பேரிடர் மேலாண்மை நிதி ரூ.1000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

* தேவையான நிதியை மத்திய அரசிடம் முன்கூட்டியே கேட்டுப்பெறுகிறோம்.

* வருகிற 11-ந்தேதி டெல்லிக்கு முதலமைச்சர் விஜய் செல்லும்போது அரசுக்கு தேவையான நிதி குறித்து பேச உள்ளார்.

* முதலமைச்சர் செயல்பாடுகளை மட்டுமே முக்கியமாக கருதுகிறார்.

* பத்திரிகை சுதந்திரம் என்பது தனிப்பட்ட விமர்சனமாக இருக்க கூடாது என்றார்.

இதனிடையே, இந்தியா கூட்டணியில் த.வெ.க. இணையுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றார்.

By admin