• Fri. Sep 27th, 2024

24×7 Live News

Apdin News

இந்தியா: மோசமான பணிச்சூழல் நிலவுகிறதா? பணியாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?

Byadmin

Sep 27, 2024


ஆனா செபாஸ்டியன் இறப்பு: மோசமான பணிச்சூழல் குறித்து இந்தியாவில் எழுந்துள்ள விவாதம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிக நேரம் வேலை பார்ப்பதாகவும் குறைவான ஊதியம் பெறுவதாகவும் இந்திய பணியாளர்கள் கூறுகின்றனர்.

  • எழுதியவர், செரில்லன் மோல்லன்
  • பதவி, பிபிசி நியூஸ், மும்பை

முன்னணி பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் 26 வயது பணியாளர் ஒருவரின் துயரமான மரணச் சம்பவம், பணியிடங்களில் பணியாளர்களின் நலன் மற்றும் கார்ப்பரேட் சூழல் குறித்த முக்கியமான விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

எர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்தில் சார்ட்டர்ட் அக்கவுண்டன்டாக இருந்த ஆனா செபாஸ்டியன் பெராயில், வேலையில் சேர்ந்த நான்கு மாதங்களிலேயே கடந்த ஜூலை மாதம் உயிரிழந்தார்.

புதிய வேலையில் “அதிகப்படியான வேலை காரணமாக ஏற்பட்ட அழுத்தம்” தனது மகளின் ஆரோக்கியத்தைப் பாதித்து அவரின் இறப்புக்கு வழிவகுத்ததாக ஆனாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம், மற்ற பணியாளர்களைப் போன்றே ஆனாவுக்கும் பணிகள் வழங்கப்பட்டதாகவும், பணிச்சுமை காரணமாக அவர் உயிரிழந்ததாகக் கூறுவதை நம்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

By admin