• Mon. Jul 21st, 2025

24×7 Live News

Apdin News

இந்திய பணக்காரர்கள் ஜிம்கானாவை உதறிவிட்டு புதிய கிளப் உலகுக்கு நுழைவது ஏன்?

Byadmin

Jul 20, 2025


உறுப்பினர்களுக்கு மட்டுமான தனியார் கிளப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம்

பட மூலாதாரம், Soho House

படக்குறிப்பு, இந்தியா புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கிக்கொண்டிருக்க, உறுப்பினர்களுக்கு மட்டுமான தனியார் கிளப்பின் நவீன அவதாரம் உருவாகியுள்ளது

பல தசாப்தங்களாக இந்தியாவின் மேல்தட்டு வர்க்த்தினர், நாட்டின் பெரிய நகரங்களில் பகட்டான பகுதிகளிலும், மலைகளில் உள்ள ரிசார்ட்களிலும் கேண்டோன்மெண்ட் நகரங்களிலும் பரவி கிடக்கும் பிரிட்டீஷ் காலத்து தனியார் கிளப்புகள் மற்றும் ஜிம்கானாக்களில் தஞ்சமடைந்து வந்தனர்.

பெல்பாய்கள், பட்லர்கள், அடர் மஹோகனி மரவேலைப்பாடுகளால் உருவான உட்புறங்கள் மற்றும் தளர்வுகள் இல்லாத ஆடைக் கட்டுப்பாடுகளுடன் இருக்கும் இந்த பிரிட்டிஷ் பாணியிலான இடங்களுக்குள் வசதியும் செல்வாக்கும் உள்ளவர்கள் – அதிகார வட்டத்தில் உலவும் பாரம்பரிய பணக்காரர்கள், பெரு முதலாளிகள், மூத்த அரசு அதிகாரிகள், முன்னாள் அரச குடும்பத்தினர், அரசியல்வாதிகள் அல்லது முப்படைகளின் அதிகாரிகள் – மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

பல ஆண்டுகளாக இந்தியாவின் பணக்காரர்களும் அதிகாரம் மிக்கவர்களும் சந்தித்து பேசிக் கொண்டது இங்குதான். சுருட்டு புகைத்து அல்லது ஸ்குவாஷ் விளையாடி சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொண்டதும், கோல்ஃப் விளையாடும்போது வணிக ஒப்பந்தங்களை இறுதி செய்ததும் இங்குதான். ஆனால் காலனிய கடந்த காலத்தை உதறவிரும்பும் நாட்டில், இவை காலத்திற்கு ஒவ்வாத கடந்தகால எச்சங்களாக தோன்றுகின்றன.

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான இந்தியா புதிய தலைமுறை செல்வந்தர்களை உருவாக்கிவரும் நிலையில், பல புதிய தனியார் கிளப்கள் உருவாகிவருகின்றன. இந்த நவீன, அதிக கட்டுப்பாடுகள் இல்லாத கிளப்கள், இந்திய பொருளாதாரம் மற்றும் மக்களின் மாற்றங்களை பிரதிபலிக்கிறது.

By admin