13
இலண்டனில் வங்கி விடுமுறை வார இறுதியில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை கடக்கும் என்பதால், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகள் தங்களுடன் குடிநீர் எடுத்துச் செல்லுமாறு டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டன் (TfL) அறிவுறுத்தியுள்ளது.
திங்கட்கிழமை இலண்டன் அதன் வரலாற்றில் மே மாதத்தின் வெப்பமிகு நாளாக 34 டிகிரி செல்சியஸைத் தொடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
“தயவுசெய்து பயணத்தின் போது ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று TfL செய்தித் தொடர்பாளர் கேட்டுக் கொண்டார். 2026ஆம் ஆண்டுக்கான முதல் அம்பர் வெப்ப-ஆரோக்கிய எச்சரிக்கையை யூகே சுகாதாரப் பாதுகாப்பு முகமை (UKHSA) விடுத்துள்ளது. அடுத்த சில நாட்களில் உயரும் வெப்பநிலை பாதிக்கப்படக்கூடியோருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தலாம் என இலண்டன்வாசிகளை எச்சரித்துள்ளது.
தொடர்புடைய செய்தி – இங்கிலாந்தை ஆட்கொள்ளும் வெப்பம்: Heathrow பகுதியில் 26.9°C வெப்பநிலை பதிவாகியது!
குளிரூட்டப்பட்ட ட்யூப் ரயில்கள் வலையமைப்பின் 40% பகுதியை உள்ளடக்கியுள்ளன. இலண்டன் ஓவர்கிரவுண்ட் மற்றும் எலிசபெத் லைன் ரயில்கள் அனைத்தும் குளிரூட்டப்பட்டவை. காற்றோட்டத் துளைகள் குறைவாக உள்ள பழைய ட்யூப் பாதைகளில், தொழிற்சாலை அளவிலான பெரிய மின்விசிறிகள் உள்ளிட்ட நிலையக் குளிரூட்டும் அமைப்புகளை TfL அறிமுகப்படுத்தியுள்ளது.