• Sat. Nov 30th, 2024

24×7 Live News

Apdin News

இஸ்ரேல் – லெபனான்: போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டதா? ஹெஸ்பொலா தலைவர் கூறியது என்ன?

Byadmin

Nov 30, 2024


இஸ்ரேல் – லெபனான் போர்நிறுத்த ஒப்பந்தம்  -  நயீம் காசிம்

பட மூலாதாரம், Reuters

லெபனானில் உள்ள ஹெஸ்பொலா ஆயுதக்குழுவின் தலைவரான நயீம் காசிம், இஸ்ரேலுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து முதல் முறையாகப் பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் ஹெஸ்பொலாவுக்கு ஒரு “பெரிய வெற்றி” என்று கூறிய அவர், லெபனான் மக்கள் பொறுமையாக இருந்ததைப் பாராட்டினார்.

கடந்த செவ்வாய்க் கிழமையன்று, இஸ்ரேலும் ஹெஸ்பொலாவும் போர்நிறுத்தம் குறித்த ஓர் ஒப்பந்ததிற்கு வந்தன. இது புதன் கிழமையன்று அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் இரு தரப்பினரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவும் பிரான்சும் மத்தியஸ்தம் செய்து கொண்டன. அதன் நிபந்தனைகள் 60 நாட்களுக்குள் ஹெஸ்பொல்லா அதன் படைகளையும் ஆயுதங்களையும் நீலக் கோடு (Blue Line) பகுதிக்கும் அங்கிருந்து வடக்கே 30 கிமீ தொலைவில் உள்ள லிடானி நதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்து திரும்பப் பெறும் என்றும், இஸ்ரேல் படிப்படியாக அங்கு எஞ்சியுள்ள தனது படைகளைத் திரும்பப் பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

By admin