1
ஈராக் – அல்-குட் நகரில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 69 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தில் மேலும் 11 பேர் காணாமல்போயுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்றிரவு முழுதும் தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இடிபாடுகளுக்கு இடையே சடலங்கள் இன்னமும் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. கட்டடத்தின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
ஈராக்கில் போதிய பாதுகாப்பு நடைமுறைகள் இல்லாததால் இது போன்ற பெரிய தீச்சம்பவங்கள் ஏற்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.