• Sun. Sep 29th, 2024

24×7 Live News

Apdin News

உதயநிதி ஸ்டாலின்: ஒரு மாநில துணை முதலமைச்சரின் அதிகாரங்கள் என்ன?

Byadmin

Sep 29, 2024


உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர்

பட மூலாதாரம், @Udhaystalin

  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 3.30 மணிக்கு துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இந்திய அரசியல் வரலாற்றில் மாநிலங்களுக்கான துணை முதலமைச்சர் பதவி என்பது பொதுவான ஒன்றாகவே உள்ளது. நீலம் சஞ்சீவ ரெட்டி, ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா, எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, எடியூரப்பா, மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் துணை முதலமைச்சர்களாக இருந்துள்ளனர்.

தற்போது இந்தியாவில் 14 மாநிலங்களில் துணை முதலமைச்சர்கள் உள்ளனர். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பிகார், மேகாலயா, ஒடிஷா உள்ளிட்ட சில மாநிலங்களில் இரண்டு துணை முதலமைச்சர்கள் பதவியில் உள்ளனர்.

கூட்டணி ஆட்சி அமையும்போது, முக்கிய கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அல்லது ஒரு கட்சிக்குள் இரு முக்கிய தலைவர்கள் இருக்கும் போது மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க, அதிகாரப் பகிர்விற்கு உள்ளிட்ட பல காரணங்களுக்காக பல்வேறு சூழ்நிலைகளில் துணை முதலமைச்சர் பதவிகள் தரப்பட்டுள்ளதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

By admin