2
இங்கிலாந்தில் உயர்கல்வி கற்று வந்த இந்திய இளைஞன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா – அரியானாவை சேர்ந்த விஜய் குமார் ஷியோரன் (வயது 30) மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் பணிபுரிந்த நிலையில், தனது வேலையை இராஜினாமா செய்துவிட்டு, இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றார்.
இந்நிலையில், வெர்ஸ்டரில் நவம்பர் மாதம் 25ஆம் திகதி அடையாளம் தெரியாத நபர்களால் விஜய் குமார் ஷியோரன் கத்தியால் தாக்கப்பட்டார். அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இளைஞன் உயிரிழந்தார்.
இளைஞனின் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் அளித்துள்ள இங்கிலாந்து பொலிஸார், சந்தேகத்தின் பேரில் 5 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இளைஞன் விஜய் குமார் ஷியோரனின் உடலை விரைவில் இந்தியாவிற்கு எடுப்பதற்கு உதவுமாறு குடும்ப உறுப்பினர்கள், இந்திய வெளியுறவு அமைச்சகத்திடமும், அரியானா முதல்வர் நயாப் சிங் சைனியிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.