• Mon. May 25th, 2026

24×7 Live News

Apdin News

எடின்பரோ மாரத்தான் ஓட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக கிளிநொச்சியில் மாரத்தான்!

Byadmin

May 25, 2026


ஸ்காட்லாந்தின் எடின்பரோவில் கிளி மக்கள் அமைப்பினால் சனிக்கிழமை (மே 23) முன்னெடுக்கப்பட்ட மாரத்தான் ஓட்ட நிகழ்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கிளிநொச்சியிலும் மாரத்தான் ஓட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு ரூபினி ட்ரஸ்ட் இலண்டன் அமைப்பினர் அணுசரணை வழங்கியிருந்தனர். கிளிநொச்சி மத்திய விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போட்டியில், பெண்களுக்கு 05 கிலோமீற்றர் தூரமும், ஆண்களுக்கு 10 கிலோமீற்றர் தூரமும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கிளி மக்கள் அமைப்பின் இணைப்பாளர் கி. விக்னராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சி. சேரலாதன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தொடர்புடைய செய்தி – புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ‘கிளி மக்கள்’ அமைப்பின் மனிதாபிமான ஓட்டம்

மேலும், சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி தெற்கு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ப. பார்த்தீபன், கிளிநொச்சி மாவட்ட செயலக கணக்காளர் பொ. சுயாத்குமார் ஆகியோரும், கௌரவ விருந்தினராக கரைச்சி கோட்டக்கல்விப் பணிப்பாளர் சு. தர்மரத்தினம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

By admin