• Sun. Jul 20th, 2025

24×7 Live News

Apdin News

கிர் சிங்கங்கள் சிறுநீரால் அனுப்பும் ரகசிய சைகைகள் – பெண் சிங்கங்களை கரவ என்ன செய்யும்?

Byadmin

Jul 20, 2025


கிர், சிங்கம், ஆசிய சிங்கம், கிர் காடு, சிங்கத்தின் கர்ஜனை, சிங்கத்தின் உறுமல், சிங்கத்தின் இனப்பெருக்கம், சிங்கத்தின் இனச்சேர்க்கை, சிங்கங்களின் தொடர்பு, பிபிசி செய்திகள், குஜராத்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கோபால் கடேஷியா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கிர் காடுகளுக்கோ, ஒரு விலங்கியல் பூங்காவிற்கோ செல்லும்போது நீங்கள் சிங்கம் கர்ஜிப்பதை நேரடியாக கேட்டிருக்கக் கூடும்.

சிங்கங்களுக்கு கர்ஜனை செய்வது தொடர்பு கொள்வதற்கான ஒரு வழி. இது பெரும்பாலும் செவிவழி தொடர்பாகும். மனிதர்கள் ஒளி மற்றும் ஒலி மூலம் தொடர்புகொள்கின்றனர். விலங்குகளின் உடல்மொழி மற்றும் ஒலிகளுக்கு பதிலளிப்பதன் மூலம் மனிதர்களும் விலங்குகளுடன் தொடர்புகொள்ளமுடியும்.

ஆனால் ஒரு சிங்கம், பிற சிங்கங்கள் மற்றும் பிற விலங்குகளுடன் ரசாயன சமிக்ஞைகள் மூலமும் தொடர்புகொள்கிறது.

சிங்கங்கள், பிற விலங்குகளுடன் தொடர்பு கொள்ள எங்கு, எப்படி ரசாயனங்களை வெளியிடுகின்றன என்பதை ஆழமாக ஆய்வு செய்ய, கிர் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்தின் கண்காணிப்பாளர் மோகன் ராம் தலைமையில் ஒரு ஆராய்ச்சியாளர் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நவீன கருவிகள் மற்றும் முறைகளைப் பயன்படுத்தி கிர் சிங்கங்கள் மீது ஆய்வு மேற்கொண்டது.

By admin