• Sun. Jul 20th, 2025

24×7 Live News

Apdin News

குந்தன்லால்: ஹிட்லரிடம் இருந்து யூத குடும்பங்களை காப்பாற்றிய இந்தியர் – என்ன செய்தார்?

Byadmin

Jul 20, 2025


குங்தன்லால்: ஆஸ்திரிய யூத குடும்பங்களை நாஜிக்களிடமிருந்து காப்பாற்றிய இந்தியரின் துணிச்சலான கதை

பட மூலாதாரம், Vinay Gupta

படக்குறிப்பு, 1928ம் ஆண்டில் அடையாளம் தெரியாத ஒருவருடன் பெர்லின் வனவிலங்கு பூங்காவில் குந்தன்லால் (வலது)

“உனக்கு நான் ஒரு ரகசியம் சொல்கிறேன். நாஜிக்களிடமிருந்து தப்பிக்க யூத குடும்பங்களுக்கு உன்னுடைய நானா (தாத்தா) உதவியுள்ளார்.”

தன் தாய் கூறிய இந்த ஒற்றை வாக்கியம் தான் தன்னுடைய தாத்தாவின் கடந்த காலத்திற்கு வினய் குப்தாவை பயணிக்க வைத்தது. அவர் அதில் கண்டுபிடித்தது, ஒரு புனைவை விட சுவாரஸ்யத்தைத் தரக்கூடியது. ஐரோப்பாவின் இருண்ட காலகட்டத்தில் முன்பின் அறியாதவர்களை காப்பாற்றுவதற்காக எல்லா ஆபத்துகளுக்கும் துணிந்த ஒரு இந்திய தொழிலதிபரின் அதிகம் அறியப்படாத சாகசங்கள் நிறைந்த கதை இது.

அவர்களை காப்பாற்றுவதற்கு இரக்கம் மட்டும் போதுமானதாக இருக்கவில்லை; மாறாக இந்த பயணம், போக்குவரத்து சவால்கள், ஆபத்துகள் மற்றும் உறுதிப்பாடு நிறைந்ததாக இருந்தது. மறுபுறம் இந்தியாவில் யூதர்களை பணியமர்த்தும் வகையில் நிறுவனங்களையும் அவர்கள் வசிப்பதற்காக வீடுகளையும் உருவாக்கினார் குந்தன்லால். ஆனால், இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது யூதர்களை “எதிரி நாட்டவர்கள்” என பிரிட்டிஷ் அறிவித்தது.

குந்தன்லாலின் வாழ்க்கை ஒரு காவியம் போன்றது: லூதியானாவை சேர்ந்த ஏழை சிறுவனாக 13 வயதில் திருமணமாகி, மரக்கட்டைகள், உப்பு முதல் ஆய்வு உபகரணங்கள் மற்றும் மாட்டு வண்டி சக்கரங்கள் வரை எல்லாவற்றையும் விற்றவர் குந்தன்லால். ஆடை தொழில் மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலையையும் அவர் நடத்தியுள்ளார். லாகூரில் படிப்பில் முன்னிலையில் இருந்த அவர், 22 வயதில் காலனியாதிக்கத்தின் கீழ் குடிமைப் பணிகளில் இணைந்தார். ஆனால், சுதந்திரப் போராட்டத்தில் இணைவதற்காக, அப்பணியிலிருந்து ராஜினாமா செய்தார், அதன்பின் பல தொழிற்சாலைகளை உருவாக்கினார்.

By admin