• Mon. May 25th, 2026

24×7 Live News

Apdin News

குல்தீப் அதிரடி… 40 ரன்கள் வித்தியாச்தில் KKR-ஐ வீழ்த்தியது டெல்லி

Byadmin

May 25, 2026


ஐ.பி.எல். 2026 டி20 தொடரின் 70-ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதனால் பேட்டிங் செய்ய வந்த டெல்லி அணிக்கு துவக்க வீரர்களான அபிஷேக் பொரெல் 22 ரன்களும், கே.எல். ராகுல் 30 பந்துகளில் 60 ரன்களும் விளாசினர். அடுத்தடுத்து களமிறங்கிய சஹில் பராக் (24 ரன்கள்), கேப்டன் அக்சர் படேல் (39 ரன்கள்), டேவிட் மிட்டலர் (28 ரன்கள்) எடுத்தனர். இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்து 203 ரன்களை குவித்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் சவுரப் தூபே 2 விக்கெட்களையும், அனுகுல் ராய், சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

204 ரன்களை துரத்திய கொல்கத்தா அணிக்கு கேப்டன் அஜிங்கியா ரஹானே சிறப்பாக ஆடி 39 பந்துகளில் 63 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய பின் ஆலென் 13 பந்துகளில் 20 ரன்களும், அடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே 25 ரன்களையும், கேமரூன் கிரீன் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரோவ்மேன் பொவெல் தன் பங்கிற்கு 21 பந்துகளில் 29 ரன்களை எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்தடுத்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிக்கொடுத்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் மற்றும் நிகிடி 3 விக்கெட்களையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களையும், அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தினர்.

By admin