• Wed. Nov 12th, 2025

24×7 Live News

Apdin News

குளிர் காலத்தில் வெந்நீரில் குளிப்பது உடல்நலனுக்கு உகந்ததா?

Byadmin

Nov 12, 2025


வெந்நீர் அல்லது குளிர்ந்த நீர் இரண்டில் குளிக்க சிறந்தது எது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குளிர்காலத்தில் மக்கள் பெரும்பாலும் வெந்நீரில் குளிப்பதைத்தான் விரும்புவார்கள்

    • எழுதியவர், இஃப்திகார் அலி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

குளிர்காலம் வந்தாலே, காலையில் பலரும் ஒரு கேள்வியுடன் போராடுவார்கள்: ‘குளிக்க வேண்டுமா, வேண்டாமா?’

குளிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டால், பிறகு அடுத்த கேள்வி எழும்: ‘வெந்நீரில் குளிப்பதா அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பதா?’

பலர், குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பதே சிறந்தது என்று கூறுகின்றனர். இது உடலுக்கு இதமளிக்கிறது, சோர்வைப் போக்குகிறது, மற்றும் குளிரில் இருந்து பாதுகாக்கிறது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால், மறுபுறம் சிலர், வெந்நீரில் குளிப்பது சருமத்தை வறண்டு போகச் செய்யும், கூந்தலுக்கு சேதம் விளைவிக்கும், மற்றும் உடலின் இயற்கை எண்ணெய் அடுக்கை அழித்துவிடும் என்று நம்புகிறார்கள்.

உண்மையில் எது சரி? நாம் எல்லாப் பருவங்களிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டுமா அல்லது குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பது சிறப்பானதா? இந்த விஷயத்தில் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

By admin