கூடலூர்: ஆட்டம் காட்டி வந்த புலியை கூண்டு வைத்துப் பிடித்த வனத்துறை
நீலகிரி மாவட்டம் கூடலுார் அருகேயுள்ள பகுதியில் சுற்றித் திரிந்த புலியை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்துள்ளனர்.
மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளை உணவுக்காக புலி தாக்குவதாக எழுந்த புகாரையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நான்கு மாதங்களாக சிறிய அளவிலான கூண்டுகளில் புலி சிக்காததால் வழக்கமான கூண்டின் அளவைவிட மிகப்பெரிய கூண்டு வைக்கப்பட்டு புலி பிடிக்கப்பட்டதாக கூடலுார் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு