கன்னட திரையுலகில் கொடூரமாக கொலை செய்யும் கொலை கும்பலை மையமாக வைத்து வெளியான ‘தண்டுபால்யா’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அப்படத்தை மையமாக வைத்து தமிழில் இயக்குநர் வெங்கட் இயக்கியுள்ள திரைப்படம் ‘தண்டுபாளையம்’. நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடிகை சோனியா அகர்வால் பெண் தாதாவாக நடித்துள்ளனர்.
இப்படத்தை டைகர் வெங்கட், கே.டிநாயக் இணைந்து இயக்கியுள்ளனர். வெங்கட் மூவிஸ் சார்பில் தயாரித்துள்ளது. சோனியா அகர்வால், வனிதா விஜயகுமாருடன் முமைத்கான், சூப்பர் குட் சுப்பிரமணியம், பிர்லா போஸ், ஆலியா, நிஷா ரபிக் கோஷ், ரவிசங்கர், மகரந்த் தேஷ்பாண்டே, ரவிகாலே, நடித்துள்ளனர். இளங்கோவன் ஒளிப்பதிவு செய்ய, ஜித்தின் ரோஷன் இசை அமைத்துள்ளார். சித்தூர், பெங்களூரு, கேஜிஎப், திருச்சி, கடப்பா, நகரி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியானது, திரைப்படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.