திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை (18) அமுல்படுத்தப்படவிருந்த நீர்வெட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை (18) காலை 10.00 மணி முதல் இரவு 07.00மணி வரை 09 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்திருந்தது.
கொழும்பு 01 முதல் 15 , பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, மெதிவெல, நுகெகொடை, நாவல, மஹரகம, பொலன்னாவை , ஒருகொடவத்தை , பொரலஸ்கமுவ, இரத்மலானை,தெஹிவளை, மொரட்டுவை ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவிருந்தது.
ஆனால் இந்த நீர்வெட்டு தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
The post கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்! appeared first on Vanakkam London.