• Tue. Dec 9th, 2025

24×7 Live News

Apdin News

சம்ஷூதீன்: இலங்கையில் இரவு முழுக்க தென்னை மர உச்சியில் இருந்து உயிர் பிழைத்தவரின் நேரடி அனுபவம்

Byadmin

Dec 9, 2025


இலங்கை வெள்ளம், இலங்கை கனமழை, இலங்கை திட்வா புயல்

பட மூலாதாரம், SRI LANKA AIRFORCE

நவம்பர் 27 அன்று திட்வா புயல் தாக்கத்தினால் இலங்கையில் பெய்த கடும் மழை காரணமாக கலாவௌ ஆறு பெருக்கெடுத்த நிலையில், அநுராதபுரம் அவுகண பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அப்போது அவுகண பகுதியை சேர்ந்த சம்ஷூதீன் தனது வீட்டை அண்மித்துள்ள பகுதியொன்றுக்கு சென்றுள்ளார்.

வெள்ளப்பெருக்கு காரணமாக நான்கு பக்கமும் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், அருகிலுள்ள தென்னை மரத்தில் ஏறியதாக சம்ஷூதீன் கூறுகிறார்.

தனது உயிரை பாதுகாத்துக்கொள்ள சம்ஷூதீனுக்கு அந்த சந்தர்ப்பத்தில் வேறு எந்தவொரு வழியும் இருக்கவில்லை.

இலங்கை வெள்ளம், இலங்கை கனமழை, இலங்கை திட்வா புயல்

பட மூலாதாரம், SRI LANKA AIRFORCE

சம்ஷூதீன் சிக்குண்டிருந்ததை பிரதேசத்தைச் சேர்ந்த பலரும் அவதானித்து, அவரை காப்பாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனர்.

By admin