1
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.
செங்டு நகரில் உள்ள பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்த அவரை நூற்றுக்கணக்கான சீன மாணவர்களும் உள்ளூர் மக்களும் அமோகமாக வரவேற்றனர்.
அவரைக் காண்பதற்காக அவர்கள் சிலமணி நேரம் காத்திருந்தனர். அவரைக் காண மிகவும் ஆர்வமாக இருந்ததாக மாணவர்கள் பலர் தெரிவித்தனர். அவருடன் கைகுலுக்கிக்கொள்ளப் பலரும் போட்டிபோட்டனர்.
மக்ரோன், உள்ளூர்ப் பூங்காவில் நடைப்பயிற்சி சென்றிருந்தார். அந்த வீடி யா இணையத்தில் மிகவும் பிரபலமாகியது.
மக்ரோனின் வருகை, சீனாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே கல்விசார் உறவை வலுப்படுத்தும் என்று நம்புவதாக மாணவர் ஒருவர் கூறினார். இரு நாடுகளுக்கும் வெவ்வேறு துறைகளில் பலம் உண்டு. ஒருவருக்கொருவர் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்றும் அம்மாணவர் கூறினார்.