• Wed. Nov 12th, 2025

24×7 Live News

Apdin News

டெல்லி கார் வெடிப்பில் உயிரிழந்த 8 பேர் யார்? – ரிக்ஷா ஓட்டுபவர் முதல் சிறுவியாபாரி வரை

Byadmin

Nov 12, 2025


டெல்லி கார் வெடிப்பு சம்பவம்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, நவம்பர் 10-ஆம் தேதி டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்புச் சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர்.

(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்)

டெல்லியில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் தற்போது வரை குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர் என டெல்லி காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

உயிரிழந்த எட்டு பேர் யார் என்பது தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ரிக்ஷா மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களாக உள்ளனர். சிலருக்கு செங்கோட்டை பகுதியில் வணிகம் உள்ளது, மற்ற சிலர் வாகனத்திற்காக காத்துக் கொண்டிருந்தவர்கள்.

டெல்லி கார் வெடிப்பு சம்பவம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நவம்பர் 10-ஆம் தேதி லோக்நாயக் மருத்துவமனைக்கு வெளியே எடுக்கப்பட புகைப்படம்

மொஹ்சின் மாலிக், 28 வயது

டெல்லி கார் வெடிப்பு சம்பவம்
படக்குறிப்பு, செங்கோட்டை பகுதியில் இ-ரிக்ஷா வாகனத்தை இயக்கி வந்தார் மொஹ்சின்

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டை பூர்வீகமாகக் கொண்ட மொஹ்சின் கடந்த சில வருடங்களாக டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் வசித்து வந்தார். செங்கோட்டை பகுதியில் மின்சாரத்தில் இயங்கும் ரிக்ஷா (இ-ரிக்ஷா) வாகனத்தை இயக்கி வந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

திங்கட்கிழமை மாலை வெடிப்புச் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் நின்று கொண்டிருந்தார். சம்பவத்திற்குப் பிறகு வந்த காவல்துறையினர் சாலையில் கிடந்த அவரின் செல்போனை மீட்டுள்ளனர். அவரைத் தேடி வந்த குடும்பத்தினர் லோக் நாயக் மருத்துவமனைக்கு (எல்என்ஜேபி) செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

By admin