1
BBC செய்தி நிறுவனம் முறையான கட்டொழுங்கை பின்பற்றவேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டாமர் கூறியுள்ளார்.
2021 இல் அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடம் தாக்கப்பட்டது. அதற்குமுன் டோனல்ட் டிரம்ப் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவதுபோல் அவருடைய உரையை BBC வெட்டியொட்டி ஒளிபரப்பியது.
அதற்காக BBCயிடம் பல பில்லியன் டொலர் இழப்பீடு கோரி வழக்குத் தொடுக்கவிருக்கிறார் டிரம்ப்.
தவற்றுக்கு BBC செய்தி நிறுவனம் மன்னிப்புக் கோரியது. அதன் இயக்குநரும் செய்திப் பிரிவுத் தலைவரும் பதவி விலகினர்.
தொடர்புடைய செய்தி : பிபிசி தலைமை இயக்குநர் டிம் டேவி, செய்தித் துறை தலைமை நிர்வாகி டெபோரா டர்னஸும் இராஜினாமா
இந்நிலையில், சுதந்திரமான BBC-ஐ ஆதரிப்பதாகத் ஸ்டாமர் கூறினார். BBC அதன் தவறுகளைச் சரிசெய்து உயர்ந்த தரத்தைக் கட்டிக்காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.