• Sun. Jul 20th, 2025

24×7 Live News

Apdin News

தாவரங்களின் ரகசிய ஒலியை விலங்குகள் புரிந்து கொண்டு செயலாற்றுவது எப்படி? ஆய்வில் புதிய தகவல்

Byadmin

Jul 19, 2025


தாவரங்களுடன் விலங்குகள் உரையாடுமா?

பட மூலாதாரம், TAU

படக்குறிப்பு, தங்கள் ஆரோக்கியத்தை காட்டும் விதமாக செடிகள் எழுப்பிய ஒலிகள் அடிப்படையில் அந்துப்பூச்சிகள் அவற்றின் மீது முட்டையிட்டன

    • எழுதியவர், பல்லவ் கோஷ்
    • பதவி, அறிவியல் செய்தியாளர்

தாவரங்கள் எழுப்பும் ஒலிகளுக்கு விலங்குகள் எதிர்வினையாற்றுகின்றன என்று புதிய ஆய்வு கூறுகிறது. அவற்றுக்கிடையில் கண்ணுக்கு புலப்படாத சூழல் மண்டலம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

தக்காளி செடிகள் தாங்கள் ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கலாம் என்பதை உணர்த்தும் மன அழுத்தத்துடன் தொடர்புடைய ஒலிகளை எழுப்பினால், பெண் அந்துப்பூச்சிகள் அந்த செடிகள் மீது முட்டையிடுவதைத் தவிர்த்தன என்பதற்கான ஆதாரத்தை முதல்முறையாக டெல் அவிவ் பல்கலைக் கழக ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ளது.

செடிகள் அழுத்தத்தில் இருந்தாலோ, ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தாலோ “கூச்சலிடுகின்றன” என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதலில் காட்டியது இந்தக் குழுதான்.

இந்த ஒலிகள் மனிதன் கேட்கும் வரம்புக்கு அப்பால் இருக்கின்றன. ஆனால் பல பூச்சிகள், வெளவால்கள் மற்றும் சில பாலூட்டிகளால் உணரமுடியும்.

By admin