• Sun. Dec 7th, 2025

24×7 Live News

Apdin News

திடீரென உயரும் விமானக் கட்டணங்கள் – இந்திய அரசாங்கம் உச்சவரம்பு விதித்தது!

Byadmin

Dec 7, 2025


Indigo விமான சேவைகள் பல ரத்துச் செய்யப்பட்ட பிரச்சினை காரணமாக ஏனைய விமான நிறுவனங்கள் விலையை மளமளவென உயர்த்துகின்றன.

எனவே, விமானக் கட்டணங்களுக்கு உச்சவரம்பை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. விலை உயர்வு நுணுக்கமாகக் கண்காணிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பெங்களூர் மற்றும் மும்பை விமான நிலையங்களில் 385 விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டன. இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ கடந்த 6 நாளாக நெருக்கடியைச் சந்திக்கிறது. விமானிகளுக்கு ஏற்பட்ட பற்றக்குறையே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.

20 ஆண்டாகச் செயல்படும் இண்டிகோ, சந்திக்கும் மிகப்பெரிய நெருக்கடி இது பார்க்கப்படுகிறது. .

தொடர்புடைய செய்தி : IndiGo விமான சேவைகளை ரத்து செய்யப்பட்டமையால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு!

இதேவேளை, அவசர உதவித்திட்டத்தையும் இந்திய அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

விமானக் கட்டணங்களை அளவுக்கு அதிகமாக உயர்த்தக்கூடாது என்று இதற்குமுன் COVID-19 நேரத்தில் இந்தியா கட்டுப்பாடு விதித்தது.

விமானப் பயணங்கள் படிப்படியாக வழக்க நிலைக்குத் திரும்புவதாக புதுடில்லி விமான நிலையம் சமூக ஊடகத்தில் பதிவிட்டது.

ஆனாலும், சில IndiGo விமானப் பயணங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக Reuters செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

By admin