• Tue. Dec 2nd, 2025

24×7 Live News

Apdin News

‘திட்வா புயல்’ மேலும் வலுவிழந்தது – சென்னையில் மழை நீடிக்குமா? புது அப்டேட்

Byadmin

Dec 2, 2025


திட்வா புயல், சென்னை, தமிழ்நாடு, இந்தியா

பட மூலாதாரம், IMD

படக்குறிப்பு, வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நிலையைக் காட்டும் இந்திய வானிலை ஆய்வு மைய இணையதள வரைபடம்.

வங்கக்கடலில் உருவான திட்வா புயல் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கைப்படி “அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 40 கி.மீ தொலைவிலும், கடலூருக்கு வடக்கு-வடகிழக்கே 150 கி.மீ தொலைவிலும் புதுச்சேரிக்கு வடகிழக்கே 130 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல், வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரைப் பகுதியையொட்டி மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருக்கிறது.”.

“இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப் பகுதியானது, வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையிலிருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கிறது. இது அடுத்த 12 மணி நேரத்துக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே தொடரும். அதன்பின் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தப் பகுதியாக மேலும் வலுவிழக்கும்” என்று வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு?

டிசம்பர் 2 காலை 8.30 மணி முதல் டிசம்பர் 3 காலை 8.30 மணி வரை

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும்.

By admin